சென்னை: சென்னை ராயப்பேட்டை தனியார் வணிக வளாகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டி நடந்து வருகிறது. 3வது நாளான நேற்று ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஹாங்காங் - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. மொத்தம் 4 ஒற்றையர் (ஆண்கள், பெண்கள்) சுற்று ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றன. இதனால் 2-2 என்ற கணக்கில் போட்டி சமனில் முடிந்தது. இதேபோல், பி பிரிவில் இந்தியா-பிரேசில் அணிகள் மோதின. இந்திய சார்பில் வேலவன் செந்தில்குமார், அனாஹத் சிங் சில்வா, அபய் சிங் ஆகிரோர் களமிறங்கினர். மொத்த 3 ஆட்டங்களில் இந்திய 3-0 என்ற கணக்கில் வென்றது. இதனால், பி பிரிவில் முதல் இடத்தை பிடித்தது.
+
Advertisement


