பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில் நேற்று, இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் லெவோன் ஆரோனியன் உடன் மோதினார். முதல் போட்டியில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய அர்ஜுன், ஒரு கட்டத்தில் டிரா செய்தார். அதன் பின் 2வது போட்டியில் அர்ஜுனின் கை ஓங்கிக் காணப்பட்டது. அற்புதமாக காய்களை நகர்த்திய அவர், சிறப்பான வெற்றியை பதிவு செய்தார்.
இதன் மூலம் காலிறுதிக்குள் அவர் நுழைந்தார். இன்னும் 3 சுற்றுகளில் அவர் வென்றால் உலகக் கோப்பையை வசப்படுத்தி சாதனை படைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இன்னொரு போட்டியில் மெக்சிகோ வீரர் ஜோஸ் எடுவர்டோ மாடினெஸ் அல்கான்டரா உடன் இந்திய கிராண்ட் மாஸ்டர் ஹரிகிருஷ்ணா மோதினார். இவர்கள் ஆடிய 2 போட்டிகளும் டிராவில் முடிந்தன.


