டெல்லி: 14வது ஜூனியர் உலகக்கோப்பை போட்டி கடந்த 28ம் தேதி சென்னை மற்றும் மதுரையில் தொடங்கியது. இறுதி போட்டி நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இதில், ஜெர்மனி அணி 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி வெண்கலம் வென்றது. 2005,2021, 2023 ஆகிய ஆண்டுகளில் நடந்த வெண்கல் பதக்கத்திற்கான போட்டியில் தோல்வியடைந்த 4வது இடத்தை பிடித்தது. தற்போது, முதல்முறையாக சொந்த மண்ணில் இந்தியா அணி வெண்கலம் வென்று உள்ளது. இந்நிலையில், வெண்கலம் வென்ற இந்திய வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என ஹாக்கி இந்தியா அறிவித்து உள்ளது. அணியில் உள்ள பயிற்சியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் வழங்கப்படுகிறது.
+
Advertisement


