மாட்ரிட்: உலகக் கோப்பை வில் வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வெண்ணம் (29) 3 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகள் ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்தன. இதில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா, சக இந்திய வீராங்கனைகள் பிரிதிகா பிரதீப், பர்னீத் கவுர் ஆகியோருடன் சேர்ந்து காம்பவுண்ட் பிரிவில் போட்டியிட்டனர். இதன் இறுதிப் போட்டியில் சீன தைபே வீராங்கனைகளிடம், 225-227 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா தோற்க நேரிட்டதால் ஜோதி மற்றும் சக இந்திய வீராங்கனைகளுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
கலப்பு பிரிவு போட்டியில் ஜோதி, ரிஷப் யாதவ் இணைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. தொடர்ந்து நடந்த தனி நபர் பிரிவில் இங்கிலாந்தின் எல்லா கிப்சனிடம் கடுமையாக போராடிய ஜோதி, 147-148 என்ற புள்ளிக் கணக்கில் நுாலிழையில் வெற்றியை தவற விட்டார். அதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. உலகக் கோப்பை வில் வித்தை போட்டிகளில் இந்தியாவுக்கு ஒட்டுமொத்தமாக, 3 தங்கம் உட்பட 14 பதக்கங்கள் கிடைத்துள்ளது.