Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

உலகக் கோப்பை மகளிர் கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!

டாக்கா: உலகக் கோப்பை மகளிர் கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி. டாக்காவில் நடைபெற்ற போட்டியில் சீன தைபே அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் 35 - 28 என்ற புள்ளிக் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தியது இந்தியா.

வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற 2-வது மகளிர் உலகக் கோப்பை கபடி போட்டியில், 'ஏ' பிரிவில் இடம்பெற்றிருந்த நடப்பு சாம்பியன் இந்திய அணி முதலிடமும், வங்கதேச அணி இரண்டாவது இடமும், 'பி' பிரிவில் சீன தைபே முதலிடமும், ஈரான் 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இந்தியா-ஈரான் அணிகள் முதல் அரையிறுதி போட்டியில் மோதியது. இதில் இந்திய அணி 33 -21 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் 25-18 என்ற புள்ளி கணக்கில் வங்கதேச அணியை, சீன தைபே அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து இந்தியா - சீன தைபே அணிகள் இன்று இறுதிப்போட்டியில் மோதின. இப்போட்டியில் 35-28 என்ற புள்ளி கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி இந்திய சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரிடையே இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.