உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற ஸ்ரீசரணிக்கு ரூ.2.5 கோடி பரிசு: ஆந்திர முதலமைச்சர்
அமராவதி: உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற ஸ்ரீசரணிக்கு ரூ.2.5 கோடி பரிசு என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். மேலும் ஸ்ரீசரணி வீடு கட்டுவதற்காக கடப்பாவில் 9,000 சதுர அடி கொண்ட நிலம் வழங்கப்படும் எனவும் ஆந்திர மாநில அரசில் குரூப் 1 அதிகாரி பணியிடத்தில் ஸ்ரீசரணிக்கு வேலை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

