சென்னை: உலக புகைப்பட கலைஞர்கள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: ‘‘நொடியில் கரைந்து செல்லும் நிகழ்வுகளை ஞாபகங்களென - வரலாற்று ஆவணங்களென அழகியலுடனும் கலைநயத்துடனும் காலத்தால் அழியாத வகையில் உறையச் செய்திடும் புகைப்படக் கலைஞர்களுக்கு வாழ்த்துகள்.’’ இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
+
Advertisement