கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் மீது நேற்று முன்தினம் இரவு ரஷ்யா தீவிர தக்குதல் நடத்தியது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதலை நடத்தியது. இதுகுறித்து கீவ் பிராந்திய நிர்வாகத்தின் தலைமை அதிகாரி தைமூர் கச்சான்கோ கூறுகையில், கீவ் நகரின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 2 பேர் பலியாகினர்.13 பேர் படுகாயமடைந்தனர். ஏவுகணை தாக்குதலால் பல இடங்களில் வீடுகள், கிடங்குகள் தீப்பிடித்தன என்றார்.
Advertisement