Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2019ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு இலங்கை அதிபர் தேர்தலில் 39 பேர் போட்டி

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் 39 பேர் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வௌியாகி உள்ளது. இலங்கையின் தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கேசின் பதவிக்காலம் நவம்பர் மாதம் நிறைவடைய உள்ளது. இதையடுத்து செப்டமர்பர் 21ம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறவுள்ள 12 மாவட்டங்களில் 1.7 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கே சுயேச்சையாக மீண்டும் போட்டியிடுகிறார். மேலும், ராணுவ முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகா, எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய தலைவர் சஜித் பிரேமதாச, சுதந்திர கட்சி தலைவருமான விஜயதாச ராஜபக்சே, லங்கா பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளராக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நமல் ராஜபக்சே உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

மேலும் இலங்கையில் சிறுபான்மையாக உள்ள தமிழ் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வை உறுதி செய்வதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கிய செல்வம் அரியநேத்திரன் தமிழர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட டெபாசிட் தொகை செய்வதற்கான காலஅவகாசம் நேற்று முன்தினம் பிற்பகல் 12 மணியுடன் முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முற்பகல் 11 மணிக்கு பிறகு வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்பட்டன. அதன்படி இலங்கை அதிபர் தேர்தலில் 3 சிறுபான்மை தமிழர்கள் மற்றும் 2 புத்தபிக்குகள் உள்பட 39 பேர் போட்டியிடுகின்றனர்.

இதுகுறித்து இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க கூறியதாவது, “நேற்று முன்தினம் 40 பேர் டெபாசிட் தொகை செலுத்தியிருந்தனர். அவர்களில் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

3 வேட்பாளர்களுக்கு எதிராக இருந்த ஆட்சேபனைகள் நிராரிக்கப்பட்டன. இதையடுத்து 39 பேர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். கடந்த 2019ல் நடந்த அதிபர் தேர்தலில்தான் அதிகளவாக 35 பேர் போட்டியிட்டனர்.