Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலவரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை : வலது சாரிகளுக்கு இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை

லண்டன்:வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் எச்சரித்துள்ளார். இங்கிலாந்தின் சவுத்போர்ட் பகுதியில் உள்ள நடன பள்ளியில் உள்ள 3 சிறுமிகள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர். கடந்த வாரம் நடந்த சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவன் அகதியாக இங்கிலாந்தில் குடியேறிவன் என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவின. இதையடுத்து தீவிர வலது சாரி குழுக்கள் புலம் பெயர்ந்தோருக்கு எதிராக பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர். சவுத்போர்ட், லீவர்பூல், லண்டன் ஆகிய இடங்களில் ஆர்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சண்டர்லேண்ட் என்ற இடத்தில் நடந்த பேரணியில் போலீசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

குடியேற்ற எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் ரோதர்ஹாமில் உள்ள ஓட்டல் ஒன்றுக்குள் புகுந்து, ஜன்னல் கண்ணாடிகளையும் நாற்காலிகளையும் உடைத்தெறிந்தனர். இந்நிலையில், கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து மூத்த அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகளுடன் பிரதமர் கெயர் ஸ்டார்மர் நேற்று ஆலோசனை நடத்தினார். முன்னதாக போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்து பிரதமர் பேசும்போது,‘‘போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் வலது சாரி குண்டர்கள் என்றும் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்தார்.