அங்காரா: தொழிலதிபர் எலான் மஸ்க்கின் எக்ஸ்(முன்பு ட்விட்டர்) நிறுவனம் அறிமுகப்படுத்திய க்ரோக் ஏஐ. உலகளவில் செயற்கை நுண்ணறிவு தளமான க்ரோக் ஏஐயின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் துருக்கியில் க்ரோக் ஏஐக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துருக்கி அதிபர் ரெசப் தையிப் எர்டோகன், அவரது மறைந்த தாயார் மற்றும் துருக்கியின் சில ஆளுமைகளுக்கு எதிராக க்ரோக் ஏஐ ஆபாசமான பதில்களை அளித்ததாக புகார் எழுந்தது.
மேலும் நவீன துருக்கியேவின் தந்தை என அழைக்கப்படும் முஸ்தபா கெமால் அதாதுர்க் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் பதிலளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில், பொதுஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக பதில்களை கூறி வரும் க்ரோக் ஏஐக்கு, துருக்கி இணைய சட்டங்களின் அடிப்படையில் தடை விதித்து துருக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.