டெய்ர் அல் பலாஹ்: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்த செவ்வாயன்று காசா முழுவதும் இஸ்ரேல் கடுமையான வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் இஸ்ரேல் காசா மீது மீண்டும் தாக்குதல் நடத்தியது. தெற்கு காசாவின் கான் யூனிஸ் மற்றும் ரபா நகரங்களிலும், வடக்கு நகரமான பெய்ட் லஹியாவிலும் உள்ள வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் சுமார் 85 பேர் வரை உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
Advertisement


