ஹவானா: கியூபாவில் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி மிகப்பெரிய போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களின் போது அங்கு அதிக அளவில் மனித உரிமை மீறல்கள் அரங்கேறியுள்ளது. இந்த போராட்டங்களின் ஒரு ஆண்டு நிறைவையொட்டி மனித உரிமை மீறல்களுக்காக அந்நாட்டு அதிபர் டயஸ் கேனலுக்கு அமெரிக்கா தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சமூக வலைதள பதிவில், ‘‘கியூபா அதிபர் டயஸ் மற்றும் 2021ம் ஆண்டு ஜூலை போராட்டத்தின்போது அநியாயமாக போராட்டக்காரர்களை தடுத்து வைத்து சித்ரவதை செய்ததற்கு பொறுப்பான மற்றும் உடந்தையாக இருந்த கியூபா நீதித்துறை மற்றும் சிறை அதிகாரிகள் மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.