Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நியாயமான விசாரணை நடந்தால் மீண்டும் இந்தியா வரத்தயார்: விஜய்மல்லையா அறிவிப்பு

லண்டன்: ரூ.9,000 கோடிக்கு மேல் பணமோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை நாடு கடத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபற்றி விஜய்மல்லையா கூறுகையில்,’ நான் ஓடிப்போகவில்லை. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணம் காரணமாக இந்தியாவிலிருந்து புறப்பட்டுச் சென்றேன். நான் இந்தியா திரும்பாததற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. நீங்கள் என்னை மோசடிக்காரன் என்று அழைப்பது எனக்கு எப்படி பொருந்தும்? இந்தியாவில் நியாயமான விசாரணை நடத்தப்படுவதற்கான உத்தரவாதம், நான் கண்ணியமாக நடத்தப்படுவதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டால் நாடு திரும்புவது பற்றி நிச்சயமாக, நான் தீவிரமாக யோசிப்பேன்’ என்றார்.