கொழும்பு: கடந்த 2000ம் ஆண்டில் விடுதலை புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான யுத்தத்தின் போது யாழ்ப்பாண மாவட்டம், மிருசுவில் என்ற இடத்தில் ஒரு குழந்தை உட்பட 8 அப்பாவி தமிழர்களை ராணுவ வீரர் சுனில் ரத்னநாயகே என்பவர் கொலை செய்தார். இந்த வழக்கில் ரத்னநாயகேவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. கடந்த 2020ல் நாட்டின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சுனில் ரத்னநாயகேவுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வரும் செப்டம்பரில் நடைபெறும் விசாரணையின் போது ஆஜராகுமாறு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, சுனில் ரத்னநாயகே ஆகியோருக்கு இலங்கை உச்சநீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்பியுள்ளது.