கோவை: கோவை கொடிசியா மைதானத்தில் 2 நாட்கள் நடக்கும் உலக புத்தொழில் மாநாடு 2025ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டை உலகின் முன்னணி ஸ்டார்ட் அப் மையங்களில் ஒன்றாக நிலைநிறுத்த மாநாடு நடைபெறுகிறது. புத்தொழில் மாநாட்டில் 42 நாடுகளை சேர்ந்த 300 பிரதிநிதிகள், 30 ஆயிரம் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். ஒன்றிய அரசின் 10 துறைகள், 10 மாநிலங்களை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன. 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்கும் மாநாட்டில் 750 அரங்குகள் அமைக்கப்பட்டு விவாதம் நடக்கவுள்ளது.
+
Advertisement