வெறும் 100 ரூபாய்க்கு உலக கோப்பை டிக்கெட்
மும்பை: இந்தியா, இலங்கை நாடுகளில் வரும் 30ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை, மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் நடக்கும் போட்டிகளை காண, ஆன்லைன் டிக்கெட் விற்பனை நேற்று முன்தினம் துவங்கியது. லீக் போட்டிகளை காண, டிக்கெட் கட்டணம், ரூ. 100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில், இந்த டிக்கெட்டுகள், ரூ.350 முதல் 850 வரை விற்கப்பட்டன.
ஷ்ரேயாஸ் தலைமையில்இந்தியா ஏ அணி
மும்பை: ஆஸ்திரேலியா ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில், அதிகாரப்பூர்வமற்ற இரு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஏ அணியுடன் மோதவுள்ளது. முதல் போட்டி, வரும் 16-19 தேதிகளிலும், 2வது டெஸ்ட், வரும் 23-26 தேதிகளிலும் நடைபெற உள்ளன. இப்போட்டியில் ஆடும் இந்தியா ஏ அணிக்கு, ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 9ம் தேதி துவங்கவுள்ள ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.