மும்பை: ஜப்பானின் டோக்கியோவில் செப். 13ம்தேதி முதல் 21ம்தேதி வரை உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இந்தியா சார்பில் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமையில் 18 இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளனர். தகுதி பெற்ற வீரர்கள்: நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ், யஷ்வீர் சிங் (ஆடவர் ஈட்டி எறிதல்), முரளி சங்கர் (ஆடவர் நீளம் தாண்டுதல்), பருல் சவுத்ரி, அங்கிதா தியானி (மகளிர் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ்), குல்வீர் சிங் (ஆடவர் 5,000 மீட்டர்),
பிரவீன் சித்ரவேல் (ஆடவர் டிரிபிள் ஜம்ப்), அன்னுராணி (மகளிர் ஈட்டி எறிதல்), பிரியங்கா கோஸ்வாமி (மகளிர் 35 கி.மீ. ரேஸ் வாக்), அனிமேஷ் குஜூர் (ஆடவர் 200 மீட்டர்), அப்துல்லா அபூபக்கர் (ஆடவர் டிரிபிள் ஜம்ப்), சர்வின் செபாஸ்டியன் மற்றும் அக்ஷ்தீப் சிங் (இருவரும் ஆடவர் 20 கி.மீ. ரேஸ் வாக்), ராம் பாபு (ஆடவர் 35 கி.மீ. ரேஸ் வாக்), பூஜா (மகளிர் 1500 மீட்டர்), சர்வேஷ் அனில் குஷாரே (ஆடவர் உயரம் தாண்டுதல்), நந்தினி அகசாரா (மகளிர் ஹெட்டத்லான்).