உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் (22) தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை..!!
சீனா: உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் 1,000 மீ ஸ்பிரிண்ட்-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் (22) தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர், இதே சாம்பியன்ஷிப்பில் 500 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.