Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் துவங்குவதை கண்காணிக்க டி.ஆர்.பி. ராஜா தலைமையில் சிறப்பு குழு..!!

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் துவங்குவதை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த 7ம் தேதி ஜனவரி 7,8 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகமையத்தில் நடைபெற்றது. அதில் 632 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

6.64 லட்சம்கோடி அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. முதலீட்டாளர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் குழு அமைக்கப்படும். இக்குழு, முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுடன் தொடர்ந்து கூட்டங்களை நடத்தி, தேவைகளை கேட்டறிந்து கண்காணிப்பதற்காக குழு அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த குழு இன்று தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் தலைமை செயலாளர், தொழில்துறைசெயலாளர், மின்வாரியத்தலைவர், தகவல் தொழில்நுட்பத்தினுடைய செயலாளர் உள்ளிட்ட 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான முடிவுகளை மேற்கொள்ளும்.

சிங்கள் விண்டோவ்ஸ் சிஸ்டத்தின் மூலமாக அதற்கான அனுமதி வழங்கப்படும். தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக முதலீடுகளை தொடர்ந்து ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளில் இந்த குழு கண்காணிக்கும். அந்த வகையில் 632 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ள நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக தொழில் நிறுவனங்களை தொடர்ந்து தமிழகத்தில் முதலீடுகள் செய்வதற்கு இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.