Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க குரல் எழுப்பும் தினமாக அமையட்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் மே தின வாழ்த்து

சென்னை: நாளை (மே 1) தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. உழைப்பே உயர்வு தரும், மனநிறைவு தரும், ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். மே தினத்தின் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடித்து, தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்திட மே தினத்தில் சூளுரைப்போம். தொழிலாளர் தினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். அந்த வகையில்,

புதுச்சேரி ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்: உழைக்கும் மக்கள் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ

வாழ்த்துகள் என புதுச்சேரி ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வைகோ: பாட்டாளி வர்க்கத்தின் உரிமைப் பதாகையை உயர்த்திப் பிடிக்க மே தினத்தில் உறுதியேற்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை: தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க குரல் எழுப்பும் தினமாக அமையட்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மே தின வாழ்த்து கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன்: மே தினத்தில் தொழிலாளர்கள், உழைப்பாளர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி: தொழிலாளர்கள் தங்கள் வாழ்வில் மேன்மேலும் உயர்வு பெற்று நலமோடும், வளமோடும் வாழ வாழ்த்துகள் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மே தின வாழ்த்து கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி: உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகிற்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய மே தினத் திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

கி.வீரமணி: உலகத்தினரை வர்ணத்தாலும், வர்க்கத்தாலும் பிரித்து வைத்து பேதப்படுத்தி சுரண்டிக் கொழுத்த சுயநல சக்திகளுக்கு எதிராக சூளுரைத்துத் தொழிலாளி வர்க்கம் வெற்றி கண்ட திருநாள் என திராவிட கழக தலைவர் கி.வீரமணி மே தின வாழ்த்து கூறியுள்ளார்.