கிருஷ்ணகிரி: அஞ்செட்டி அருகே நாட்றாம்பாளையத்தில் தொழிலாளி மல்லப்பா(50) நாய் கடித்ததில் உயிரிழந்துள்ளார். ஆக.27ல் தெரு நாய்களை மல்லப்பா விரட்டியபோது, அவரது முகத்தில் நாய் கடித்துள்ளது. தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்கள் சிகிச்சை பெற்றார் மல்லப்பா. நேற்று முன்தினம் மல்லப்பாவுக்கு தலைசுற்றல், வாந்தி ஏற்பட்டதால் மீண்டும் தேன்கனிக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மல்லப்பா உடல்நிலை மோசமானதால் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மல்லப்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
+
Advertisement