சென்னை: கருணை அடிப்படையில் பணி நியமனம் தொடர்பான விதிகளை திருத்தம் செய்து அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்களின் அடிப்படையில் 3 ஆண்டுகளுக்குள் பணி வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் மாநில அளவில் மூப்பு பட்டியல் வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருத்தம் செய்யப்பட்ட பணி நியமனம் ஆக.4ம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
+
Advertisement