Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகளிர் உலக கோப்பை சாம்பியன் இந்திய கிரிக்கெட் அணிக்கு கட்சித்தலைவர்கள் பாராட்டு

சென்னை: மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றிருப்பது அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் பெருமைக்கு மகுடம் சேர்த்துள்ளனர்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): அணியில் உள்ள அனைவரும் சிறப்பாக விளையாடி, கிரிக்கெட் விளையாட்டில் சிறப்பு முத்திரை பதித்து நாட்டிற்கு பெருமை தந்துள்ளனர். அவர்களை பாராட்டுகிறோம்.

ஜி.கே.வாசன் (தமாகா): சொந்த மண்ணில் உலகக் கோப்பையை கைப்பற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. முதன் முறையாக மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது பாராட்டுக்குரியது.