Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகளிர் உலக கோப்பை 2வது அரையிறுதி போட்டி; ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு!

மும்பை: மகளிர் உலக கோப்பை 2வது அரையிறுதி போட்டி; இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 13வது ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதின. லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முறையே முதல் நாள் 4 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்ரிக்கா அரையிறுதிக்குள் நுழைந்தன. இலங்கை, நியூசிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறின. அரையிறுதி போட்டி நேற்று தொடங்கியது. கவுகாத்தியில் மாலை 3 மணிக்கு தொடங்கிய முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து - தென்ஆப்ரிக்க அணிகள் மோதின.

மும்பை டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா -இந்தியா விளையாடி வருகிறது. நடப்பு சாம்பியனும், நம்பர் 1 அணியுமான ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டுமெனில் இந்தியா கடுமையாக போராட வேண்டி இருக்கும். பேட்டிங்கில் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதுகெலும்பாக உள்ளார். அவர் லீக் சுற்றில் 7 போட்டியில் ஒரு சதம் 2 அரைசதத்துடன் 365 ரன் விளாசி டாப்பில் உள்ளது. அவர் சிறப்பாக ஆடினால் மட்டுமே இந்தியா நல்ல ஸ்கோரை எடுக்க முடியும். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 175, ஹர்லீன் தியோல் 169 ரன் எடுத்துள்ளனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 151, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 141ரன் எடுத்துள்ளனர்.

லீக் சுற்றில் பிரதிகா ராவல் 308 ரன் அடித்த நிலையில் காயத்தால் அவர் விலகினார். பின்னடைவு தான். அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள ஷபாலி வர்மா லெவனில் இடம் பிடித்துள்ளார். பவுலிங்கில் சுழல் தீப்தி சர்மா 15 விக்கெட் எடுத்துள்ளார். ஸ்ரீ சரணி 11, கிராந்தி கவுட் 8 விக்கெட் எடுத்துள்ளனர். பவுலிங் தான் இந்திய அணிக்கு கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. சொந்த மண்ணில் ஆடுவது இந்திய அணிக்கு சற்று நம்பிக்கையை அளிக்கும். ஆஸி.யை வீழ்த்தி 3வது முறையாக பைனலுக்குள் நுழைய இந்தியா போராடும். மறுபுறம் ஆஸ்திரேலியா, பேட்டிங், பந்து வீச்சில் அசுர பலத்தில் உள்ளது.

கேப்டன் அலிசா ஹீலி 294, ஆஷ்லீ கார்ட்னர் 265,பெத் மூனி187, ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 185ரன் விளாசி உள்ளனர். பவுலிங்கில் அன்னாபெல் சதர்லேண்ட் 15, அலனா கிங் 13 விக்கெட் எடுத்துள்ளனர். எந்த இலக்கையும் எட்டும் வகையில் நீண்ட பேட்டிங் வரிசை, ஆல்ரவுண்டர்கள் இருப்பது ஆஸி.க்கு கூடுதல் பலமாகும். இதுவரை 9 முறை பைனலில் ஆடி உள்ள ஆஸ்திரேலியா 7 முறை பட்டம் வென்றுள்ளது. இன்று இந்தியாவை வீழ்த்தி 10வது முறையாக பைனலுக்குள் நுழையும் முனைப்பில் உள்ளது.