விசாகப்பட்டினம்: இந்தியாவில் நடந்து வரும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10வது ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் நேற்று விசாகப்பட்டினத்தில் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரதிகா ராவல் 37, ஸ்மிருதி மந்தனா 23 ரன்னில் அவுட்டாகினர். அடுத்து வந்த ஹார்லின் தியோல் 13 ரன், கேப்டன் ஹர்மன் கவுர் 9 ரன், தீப்தி சர்மா 4 ரன், அமன்ஜாட் கவுர் 13 ரன், ஜெமியா ரோட்ரிஜிஸ் டக் அவுட் ஆக 40 ஓவர் முடிவில் இந்திய அணி 153 ரன்களுக்குள் 7 விக்கெட்டை இழந்து தத்தளித்து கொண்டிருந்தது. அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் பொறுப்புடனும், அதிரடியாகவும் விளையாடி 77 பந்துகளில் 94 ரன்கள் குவித்து அவுட் ஆனார். ஸ்னே ரானா தனது பங்குக்கு 33 ரன் எடுத்தும், ஸ்ரீ சாரானி டக் அவுட் ஆக இந்திய அணி 49.5 ஓவர் முடிவில் 251 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தென் ஆப்ரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டிரியான் 3 விக்கெட், கப், கிளேர்க், மிலபா தலா 2 விக்கெட், சேக்குனே ஒரு விக்கெட் எடுத்தனர். 252 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்காக அணி களமிறங்கியது.
+
Advertisement