மகளிர் உரிமைத் தொகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடுத்தகட்ட பாய்ச்சலாக இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
புதுக்கோட்டை: மகளிர் உரிமைத் தொகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடுத்தகட்ட பாய்ச்சலாக இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எங்கள் அண்ணன் தரும் மாதாந்திர சீர் ரூ.1000 என்று சகோதரிகள் கூறுகின்றனர். தகுதியான மகளிருக்கு நிச்சயம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். திராவிட மாடல் ஆட்சி 2.0லும் மகளிர் உரிமைத் தொகை தொடரும்

