கொழும்பு: மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட்டின் 22வது போட்டியில் பாகிஸ்தான் - தென் ஆப்ரிக்கா மகளிர் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணியின் துவக்க வீராங்கனைகளில் ஒருவரான கேப்டன் லாரா உல்வார்ட் அட்டகாசமாக ஆடி 82 பந்துகளில் 90 ரன்னும், பின் வந்தோரில், சூன் லூஸ் 61 ரன்னும் குவித்து அவுட்டாகினர். இடையில் மழை பெய்ததால், போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 40 ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்கா, 9 விக்கெட் இழப்புக்கு 312 ரன் குவித்தது. அந்த அணியின் மாரிஸான் காப் 43 பந்தில் 68 ரன்னுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.
+
Advertisement