நியூயார்க்: வரும் 2031ம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்த, அமெரிக்கா, மெக்சிகோ, கோஸ்டாரிகா, ஜமைக்கா ஆகிய நாடுகளின் கால்பந்து கூட்டமைப்புகள் விருப்பம் தெரிவித்து அதற்கான நடவடிக்கைகளை துவக்கியுள்ளன. இதற்கான அறிவிப்பை, மெக்சிகோ கால்பந்து கூட்டமைப்பு தலைவர் மைக்கேல் அரியோலா, ஜமைக்கா கால்பந்து கூட்டமைப்பு தலைவர் மைக்கேல் ரிக்கெட்ஸ், கோஸ்டாரிகா கால்பந்து கூட்டமைப்பு தலைவர் ஒசேல் மரோடோ மார்டினஸ், அமெரிக்கா கால்பந்து அமைப்பின் தலைவி சிண்டி பார்லோ கோன் நேற்று முன்தினம் நியூயார்க்கில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டனர். மகளிர் போட்டிகளை 2031ல் நடத்துவதற்கான விண்ணப்பம், வரும் நவம்பரில் ஃபிபாவிடம் முறைப்படி சமர்ப்பிக்கப்படும் என தெரிகிறது. இது தொடர்பான இறுதி முடிவு, அடுத்தாண்டு ஏப்ரலில் எடுக்கப்படும்.
+
Advertisement