இந்தூர்: மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் நேற்று, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் ஆடிய இங்கி. துவக்க வீராங்கனை டேமி பியுமான்ட் 78 ரன் குவித்தார். மற்ற வீராங்கனைகள் ரன் குவிக்கத் தவறியதால், 50 ஓவரில் இங்கி. 9 விக். இழந்து 244 ரன் எடுத்தது. அதையடுத்து, 245 ரன் இலக்குடன் ஆஸி களமிறங்கியது. துவக்க வீராங்கனைகள் போப் லிச்பீல்ட் 1, ஜார்ஜியா வால் 6, பின் வந்த எலிசே பெரி 13, பெத் மூனி 20 ரன்னில் அவுட்டாகினர். பின் இணை சேர்ந்த ஆஷ்லே கார்ட்னர், அனபெல் சதர்லேண்ட் அதிரடியாக ஆடினர். கார்ட்னர் 104, சதர்லேண்ட் 98 ரன் குவித்ததால், ஆஸி, 40.3 ஓவரில் 4 விக். இழப்புக்கு 248 ரன் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது.
+
Advertisement
