முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பெண் பாதுகாப்பில் எந்த சமரசத்துக்கும் இடம் தராது: ஆர்.எஸ்.பாரதி
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பெண் பாதுகாப்பில் எந்த சமரசத்துக்கும் இடம் தராது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். திமுக அரசுக்கு களங்கம் கற்பிக்கால் என நினைத்து எதிர்க்கட்சிகள் அவதூறு செய்கின்றன. பெண்களின் நலனையே முதன்மை நோக்கமாக கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி வழியில் அன்புமணி, நயினார் நாகேந்திரனும் சுயலாபத்துக்காக அரசியல் செய்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

