விசாகப்பட்டினம்: மகளிர் உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் ஆஸ்திரேலியா-வங்கதேச அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்தது. வங்கதேச அணியில் ரூப்யா ஹைதர் 44 ரன், சோபனா மோஸ்டரி 66 ரன் எடுத்தனர். அடுத்த களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 24.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஹீலி 113 ரன், லிட்ச்பீல்ட் 84 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
+
Advertisement