விசாகப்பட்டினம்: மகளிர் உலகக் கோப்பை தொடரின் 27வது போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசி. வீராங்கனைகள், இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதனால், 38.2 ஓவரில் நியூசி. 168 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
பின், 169 ரன் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து வீராங்கனைகள் களமிறங்கினர். துவக்க வீராங்கனை அமி ஜோன்ஸ் 86 ரன் குவித்து பட்டையை கிளப்பி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு துவக்க வீராங்கனை டேமி பியுமோன்ட் 40 ரன்னிலும், பின் வந்த ஹீதர் நைட் 33 ரன்னிலும் அவுட்டாகினர். 29.2 ஓவரில் இங்கி. 2 விக்கெட் மட்டுமே இழந்து 172 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றது.
