இந்தூர்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஒரு நாள் போட்டியில் நேற்று, இங்கிலாந்து அணிக்கு எதிராக 289 ரன் இலக்குடன் ஆடிய இந்திய அணி, 24 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்திருந்தது. மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் தொடரின் 20வது போட்டி இந்தூரில் நேற்று நடந்தது. இதில், இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீராங்கனைகள் டேமி பியுமான்ட் 22, அமி ஜோன்ஸ் 56 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின் வந்த ஹீதர் நைட் அட்டகாசமாக ஆடி 109 ரன்கள் குவித்தார். கேப்டன் நாட் சிவர்பிரன்ட் 38 ரன் எடுத்தார். 50 ஓவர் முடிவில் இங்கி. 8 விக்கெட் இழந்து 288 ரன் குவித்தது. பின், 289 ரன் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீராங்கனை பிரதிகா ராவல் 6 ரன்னில் வீழ்ந்தார்.
பின் வந்த ஹர்லீன் தியோல் 24 ரன்னில் அவுட்டானார். அதையடுத்து இணை சேர்ந்த ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். 24 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்திருந்தது. மந்தனா 48, ஹர்மன்பிரித் 42 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.