நவிமும்பை: மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் போட்டியில் நேற்று, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் 27 ஓவர்களில், 9 விக்கெட் இழப்புக்கு 119 ரன் எடுத்தது. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 28வது போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் நேற்று மோதின. போட்டியின் துவக்கத்திலும், போட்டி துவங்கி சிறிது நேரத்துக்கு பின்னும் மழை குறுக்கிட்டதால், 27 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீசியது.
அதையடுத்து களமிறங்கிய வங்கதேசத்தின் துவக்க வீராங்கனைகள் சுமையா அக்தர் 2, ரூப்யா ஹைதர் 13 ரன்னில் வீழ்ந்தனர். பின் வந்த கேப்டன் நிகர் சுல்தானா 9, ஷோபனா மோஸ்தாரி 26, ஷொர்னா அக்தர் 2, நஹிதா அக்தர் 3, ஷர்மின் அக்தர் 36, ரபேயா கான் 3, ரிது மோனி 11 ரன் என மோசமாக ஆடி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 27 ஓவர் முடிவில் வங்கதேசம், 9 விக்கெட் இழப்புக்கு 119 ரன் எடுத்தது. இந்தியா தரப்பில் ராதா யாதவ் 3, ஸ்ரீசரணி 2 விக்கெட் வீழ்த்தினர்.
