படுமி: ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியின் 3வது சுற்றில் இந்திய வீராங்கனை வந்திகா, ரஷ்ய வீராங்கனை கேதரீனா லாக்னோவை அபாரமாக வீழ்த்தினார். ஜார்ஜியாவின் படுமி நகரில், ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டியின் 3வது சுற்றின் முதல் ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை கேதரீனா லாக்னோ - இந்திய வீராங்கனை வந்திகா அகர்வால் மோதினர்.
இப்போட்டியில் சிறப்பாக ஆடிய வந்திகா அபார வெற்றி பெற்றார். இந்த சுற்றின் அடுத்த ஆட்டத்தில் டிரா செய்தாலே, வந்திகா, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறுவார். மற்றொரு 3வது சுற்றுப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக், செர்பியாவின் தியோடரா இஞ்சாக்கை வெற்றி கண்டார். அமெரிக்க வீராங்கனை கரிஸா யிப் - தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி இடையில் நடந்த மற்றொரு போட்டி டிராவில் முடிந்தது.