மகளிர் பயணம் செய்ய கட்டணம் வசூலிப்பு: இது விடியல் பயணத் திட்டப் பேருந்து அல்ல: தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவு விளக்கம்
சென்னை: நேற்று இரவு மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை என்று போர்டு போட்ட பஸ்ஸில் காசு வாங்கி பெண்களுக்கு ஆண் டிக்கெட் தருகிறார்கள்' என்று பேருந்து பயணச்சீட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவு தெரிவித்துள்ளதாவது; 'மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பது விடியல் பயணத் திட்டத்தின் கீழ் வரும் பேருந்து அல்ல. இது திருச்சியில் இருந்து முசிறிக்கு செல்லும் BS-4 புறநகர் பேருந்து (நீல நிறம்). இதற்கு பயணக் கட்டணம் உண்டு.
பேருந்தின் நடத்துனர் மின்னனு பயணச்சீட்டில் (POS) பயணி விபரம் மகளிர் என வருவதற்கு பதிலாக தவறுதலாக ஆண் என குறிப்பிட்டு பயணச்சீட்டு வழங்கியுள்ளார்' என்று துணை மேலாளர் வணிகம் கூட்டாண்மை (சேலம் புறநகர் பேருந்து) தெரிவித்துள்ளார். தவறான தகவலைப் பரப்பாதீர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.