சவுதாம்ப்டன்: இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர், 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடி வருகின்றனர். சவுதாம்ப்டனில் நேற்று முதல் ஒரு நாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இந்திய பந்து வீச்சாளர் கிரந்தி கவுட்டின் மந்திரப் பந்து வீச்சில் சிக்கிய இங்கிலாந்து துவக்க வீராங்கனைகள் டேமி பியுமான்ட் 5 ரன்னிலும், அமி ஜோன்ஸ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தனர்.
பின், ஸ்னேஹ் ராணா பந்துகளில் எம்மா லாம்ப் (39 ரன்), கேப்டன் நாட் சிவர் பிரன்ட் (41 ரன்) அவுட்டாகி வெளியேறினர். பின் வந்த ஆலீஸ் டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் சிறப்பாக ஆடி 53 ரன் எடுத்தார். சோபியா டங்க்லீ 83 ரன் குவித்தார். இங்கிலாந்து, 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்தது. பின், 259 ரன் வெற்றி இலக்குடன் இந்தியா களமிறங்கியது.