பீகார் தேர்தலின் போது பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க தேர்தல் ஆணையம் எப்படி அனுமதித்தது என்று தேசியவாதகாங்கிரஸ்(சரத்பவார்) கட்சி தலைவர் சரத்பவார் கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில்,’ பீகார் தேர்தலின் முடிவு முதல்வர் நிதிஷ் குமார் கணித்ததிலிருந்து வேறுபட்டதல்ல. பெண்கள் தேர்தலை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர். பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.10,000 டெபாசிட் செய்யப்படும் திட்டம் சாதகமான விளைவை ஏற்படுத்தியதாக நான் முன்பே உணர்ந்தேன்.
தேர்தல்களின் போது இந்தத் திட்டத்தின் கீழ் பணம் விநியோகிக்க தேர்தல் ஆணையம் எவ்வாறு அனுமதித்தது. இந்த பணம் விநியோகம் சரியானதா என்று தேர்தல் ஆணையம் சிந்திக்க வேண்டும். மகாராஷ்டிரா தேர்தலின் போதும், லட்கி பஹின் திட்டத்தின் கீழ் பணம் அதிகாரப்பூர்வமாக பெண்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. ஆளும் கட்சிகள் தேர்தல்களில் இதேபோன்ற முறையைப் பயன்படுத்தினால், அது மக்களின் நம்பிக்கையையும் தேர்தல் செயல்முறையையும் பாதிக்கும்’ என்றார்.


