சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி, சாங்கி சிட்டி பாயிண்ட் மாலில் இந்தியரான அங்கித் சர்மா(46) என்பவர் தொழில்நுட்ப நிபுணரான 31வயது பெண்ணை சந்தித்தார். சக ஊழியர் தனது சுயவிவரத்தை அங்கித் சர்மாவிடம் பகிர்ந்ததை அடுத்து முதல் முறையாக அந்த பெண் அவரை சந்தித்துப் பேசினார். தொழில்முறை விவாதங்களுடன் உரையாடல்கள் நடந்த நிலையில் சர்மா திடிரென அந்த பெண்ணிடம் பாலியல் உரையாடல்களை தொடங்கினார். அந்த பெண் கழிவறைக்கு சென்று திரும்பிய நிலையில், அவரை அருகில் இருந்த நர்சிங் அறைக்கு இழுத்துச்சென்ற சர்மா அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்தது. சர்மா குற்றவாளி என ஊர்ஜிதமான நிலையில் அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், 6 பிரம்படிகளும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
+
Advertisement