சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்கொணர்வு வழக்கில் விசாரணைக்காக ஆஜரான சிறுமி திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். படுகாயம் அடைந்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்தமானைச் சேர்ந்த சிறுமியின் தாய் மறுமணம் செய்ததால் அரசு காப்பகத்துக்கு செல்ல நீதிபதி உத்தரவிட்டார். காப்பகத்துக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டதால் விரக்தியில் மாடியிலிருந்து குதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
+
Advertisement