பெங்களூரு: தாவணகெரெ மாவட்டத்தின் ஹரிஹர் தொகுதி பாஜ எம்.எல்.ஏ பி.பி.ஹரீஷ் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘எம்.எல்.ஏவாகிய நான் ஏதாவது கூட்டத்திற்கு சென்றால் மாவட்ட எஸ்.பி உமா பிரசாந்த் கண்டுகொள்வதே இல்லை. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் வீட்டு வாசல் அருகே மணிக்கணக்கில் அவர்களது வீட்டு நாய் மாதிரி காத்துக்கொண்டிருக்கிறார்’ என்றார். இதையடுத்து, அவர் மீது கேடிஜே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
+
Advertisement