திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா நேற்று தரிசனம் செய்தார். பின்னர் கோயில் விருந்தினர் மாளிகையில் நிருபர்களிடம் கூறியதாவது: உலகமே மெச்சும் அளவிற்கு தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியடைந்துள்ளது. தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள வின்பாஸ்ட் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலையின் விற்பனையை ஆக.4ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த தொழிற்சாலை 15 மாதத்திற்குள் தனது விற்பனையை துவக்குவது வரலாற்று சாதனை. இது தமிழக முதல்வரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும். தூத்துக்குடியில் தொடங்கும் கார் தொழிற்சாலையால் பல தொழில் நிறுவனங்களிடம் போட்டி ஏற்பட்டு புதிய நல்ல வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும். அதன் தயாரிப்புகள் தமிழ்நாட்டிலேயே நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.