தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் வியட்நாமைச் சேர்ந்த முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட், தூத்துக்குடியில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை நிறுவ ஒப்பந்தம் கையெழுத்திட்டது. அடுத்த மாதமே வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த மாத இறுதியில் வின்பாஸ்ட் விஎப்7 மற்றும் விஎப்6 கார்கள் அறிமுகம் செய்ய உள்ளன. இதற்கான முன்பதிவை இந்த நிறுவனம் தொடங்கி விட்டது. வின்பாஸ்ட் நிறுவன இணையதளத்தின் மூலம் ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். விஎப்7 காரில் 70.8 கிலோவாட் அவர் பேட்டரி உள்ளது. 204 எச்பி பவர் மற்றும் 350 எச்பி திறன்களை வெளிப்படுத்தும் இரண்டு வித இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கும். விஎப்6-ல் 59.6 கிலோவாட் அவர் பேட்டரி, 204 எச்பி பவரை வெளிப்படுத்தும் இன்ஜின் இடம் பெற்றிருக்கும் என நிறுவனத் தரப்பில் கூறப்படுகிறது.