நெல்லை: நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள காற்றாலைகள் மூலம் அதிக மின்சாரம் காற்று சீசன் காலங்களில் கிடைக்கிறது. தற்போது ஆடி மாதம் முடிந்த பிறகும் காற்றின் வேகம் குறையாமல் வீசுவதால் ராதாபுரம், வள்ளியூர் வட்டாரங்களில் உள்ள காற்றாலைகளில் இருந்தும், குமரி மாவட்டங்களில் உள்ள காற்றாலைகளில் இருந்தும் காற்றாலை மின் உற்பத்தி அதிகளவில் நடைபெறுகிறது. நேற்றை நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டுமொத்த காற்றாலை மின் உற்பத்தி 3,798 மெகாவாட்டாக இருந்தது.
+
Advertisement