தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தாசர்பட்டி பகுதி, பொள்ளாச்சி சாலையில் திருப்பூர் பின்னலாடை நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான ராட்சத காற்றாலை உள்ளது. நேற்று இந்த ஆலையின் உச்சியில் கரும்புகையுடன் தீப்பற்றியது. இதனை பார்த்த குடியிருப்புவாசிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது, 40 அடி நீள ராட்சத காற்றாடி வெடித்து சிதறி தீப்பிழம்புகளாக குடியிருப்புக்குள் விழுந்தன. தகவலறிந்து தீயணைப்பு துறையினர் சென்று தீயை அணைத்தனர்.
கியர் பாக்சில் போதி ஆயில் இல்லாததால் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றியதாக கூறப்படுகிறது. கடந்த 9ம் தேதி அருகில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் ரூ.5 கோடி மதிப்புள்ள ராட்சத காற்றாலை வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது.