உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்; கால் இறுதிக்கு தகுதி பெறுவாரா பி.வி.சிந்து: 2வது சுற்றில் இன்று 2ம் ரேங்க் வீராங்கனையுடன் மோதல்
பாரீஸ்: 29வது உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் உலக சாம்பியனும், தரவரிசையில் 15வது இடம் வகிப்பவருமான இந்தியாவின் 30 வயதான பி.வி.சிந்து, நேற்று 2வது சுற்றில் 40ம் ரேங்க் வீராங்கனையான மலேசியாவின் 21 வயதான லெட்சனா கருபதேவனுடன் மோதினார். இதில் 21-19, 21-15 என பி.வி.சிந்து வெற்று பெற்று கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.
இன்று மாலை 3வது சுற்றில், 2ம் நிலை வீராங்கனையான சீனாவின் 25 வயதான வாங் ஜியியுடன் மோத உள்ளார். இந்த போட்டி பி.வி.சிந்துவுக்கு கடும் சவாலாக இருக்கும். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி 22-20, 21-13 என வெற்றிபெற்று கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தது. இன்று இரவு 10.10 மணிக்கு ரவுண்ட் 16 சுற்றில், சீன ஜோடியுடன் மோதுகின்றனர்.