வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறுமா என்பது நாளை தெரியும்: தென்மண்டல வானிலை மைய தலைவர் அமுதா பேட்டி
சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறுமா என்பது நாளை தெரியும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா பேட்டி அளித்துள்ளார். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. அரபிக்கடலில் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே பகுதியில் நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாம்பனில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது. சிதம்பரம் 8.4 செ.மீ., காரைக்கால், நாகையில் தலா 8.3 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும்.சூறாவளிக் காற்று 40 முதல் 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்தார்.