கோத்தகிரி : கேத்தரின் நீர்வீழ்ச்சியில் அடிப்படை வசதிகள் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாததால் வார விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து வருகிறது.
கோத்தகிரி குஞ்சப்பனை ஊராட்சி பகுதியில் கேத்தரின் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான இங்கு கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாமலும், குடிநீர், மூடிவைக்கப்பட்ட கழிப்பறை வசதிகள்,வாகன நிறுத்தும் இடம் மற்றும் வனவிலங்குகள் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உள்ளன.
இதனால் வார விடுமுறை நாட்கள் மட்டுமின்றி பிற நாட்களிலும் நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து வருகிறது.எனவே சுற்றுலாத்துறை மூலம் அங்கீகரிக்கப்பட்டு வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.