திருவனந்தபுரம்: கேரளாவில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் வனவிலங்குகளை சுட்டுக்கொல்ல பொதுமக்களை அனுமதிக்கும் வகையில் ஒன்றிய அரசின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வர கேரள அரசு தீர்மானித்தது.
இது தொடர்பான மசோதா கேரள சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவின்படி மாவட்ட கலெக்டரோ அல்லது தலைமை வனப்பாதுகாவலரோ வனவிலங்குகளை சுட்டுக்கொல்ல அனுமதி அளிக்கலாம்.